Poetry - கவிதை
தூற்றலோடு ஏலனமும் ஓங்கி
வேலி மேய்ந்த பயிர்களாய்,
மடிந்தவர்கள் பேரளவு
பலி கெடாக்கள் அல்ல
பலி மாதுக்கள்
நெஞ்சம் தாங்கி உணர்வு உரைந்து
போர்கள வாழ்வின் வடுக்களவை
நிஜத்தில் மட்டும் அல்ல
நிழல் மனதிலும் ஏராளம்
குடுவைக்குள் கொடுமைகள் தாங்கி
ஊருக்குரைக்க அச்சமும் ஏந்தி
பேதைகள் ஒடுங்கினர் சலனமின்றி
கர்தாக்கள் உலவினர் வெட்கமின்றி
ஊர் அரியும் தருணம்
வெட்கி தலைகுணிய இடரும்
ஏலன ஏச்சுகள் படரும்
கிலி கொள்ள காரணம் - சமுதாயம்!
தயக்கத்தின் காரணம் - சமுதாயம்!
ஏன் நீர் துளி கண்ணில்
வீர்த்தெழு மண்ணில்
உன் புகழ் ஓங்கட்டும் விண்ணில்
சமுதாயமே ஆதரி உன்னில்!
போனவை போகட்டும், தடம் திரும்ப
ஏனைய வழிகளும், தானைய உயிர்களும்
உண்டுனக்குதவ, இயலா வாழ்க்கை
இயல்புரும், வெரூஉவா உன் வருகை உலகிற்கே
ஒளி தரும்!!!
- ராதா கிருஷ்ணன்
Like